Skip to main content

Posts

Showing posts from September, 2022

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் கொன்றை வேந்தன் 66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம் அறியாதவர் போன்று இருப்பது பெண்களுக்கு அணிகலன் 67. பையச் சென்றால் வையந் தாங்கும் நிதானமாகச் செய்யும் கார்யங்களில் வெற்றி நிச்சயம் 68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர் அனைத்துத் தீங்குகளையும் விட்டு விடு 69. போனகம் என்பது தானுழுது உண்ணல் தான் முயன்று உழைத்து சம்பாதித்ததே உணவு என்பதாகும் 70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண் தேவாம்ருதமே கிடைத்தாலும் , பிறரோடு சேர்ந்து உண்

அவ்வையர் ஞானகுறள்

  அவ்வையர் ஞானகுறள் பகுதி 1   வீட்டுனெறிப்பால் 1. மோட்சம் செல்லும் வழி   ஞானகுறள் : 1 ஆதியாய் நின்ற வறிவுமுத லெழுத் தோதிய நூலின் பயன் .           1   ஒருவனிடம் ஆதியாய் நின்று அவனை ஆட்டிப் படைப்பது அவனிடமுள்ள அறிவு. அந்த அறிவுதான் அவனுக்கு முதலெழுத்து (தலையெழுத்து). அந்த அறிவை பயன்படுத்தி இறைவனை நாடும்போது, நூலினால் பெற்ற அறிவு முழுமை பெறுகிறது.   Meaning: The knowledge of a person makes him perfect. That knowledge is his initial and investment. When he seeks the God using that knowledge gained from the scriptures it becomes complete.  

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் கொன்றை வேந்தன் 61. பிறன்மனை புகாமை அறம் எனத்தகும் அடுத்தவன் மனைவியை விரும்பாததே சிறந்த அறம் 62. பீரம் பேணில் பாரம் தாங்கும் தாய்ப்பாலை ஊட்டி வளர்த்தால் , அந்தக் குழந்தை பலம் பெறும் , நிர்வாக சுமைகளைத் தாங்கும் 63. புலையும் , கொலையும் களவும் தவிர் புலாலுண்ணுதல் , கொலை , திருடு இம்மூன்றையும் செய்யாதே 64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம் கொடியவர்களிடம் சிறந்த ஒழுக்கங்கள் இருக்காது 65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும் ஞானம் பெற்றோர்க்கு சுற்றம் என்ற பந்தமும் , கோபமும் கிடையாது

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் கொன்றை வேந்தன் 56. நைபவர் எனினும் நொய்ய உரையேல் சக்தியற்றவர் இடத்தும் மனம் நோகுமாறு பேசக்கூடாது 57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர் சிறியவர்களும் செய்யும் கார்யத்தால் சிறந்தவர் ஆவர் 58. நோன்பு என்பது கொன்று தின்னாமை உயிரைக் கொன்று அதை உண்ணாமல் இருப்பதே விரதமாகும் 59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும் ஒருவர் புண்ணியம் அவர் அடைந்த விளைச்சலில் தெரியும் 60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண் சிறந்த உணவாக இருந்தாலும் , காலமறிந்து உண்ண வேண்டும்

ஔவையார் பாடல்கள்

                                              ஔவையார் பாடல்கள் கொன்றை வேந்தன்   51. நீர்அகம் பொருந்திய ஊர்அகத்திரு நீர்   நிறைந்த   ஊரில்   வசிக்க   வேண்டும் 52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி சிறிய கார்யமாக இருந்தாலும் , யோசித்து செயல் பட வேண்டும் 53. நூன் முறை தெரிந்து சீலத் தொழுகு நல்ல நூல்களைப் பயின்று , ஒழுக்கத்தோடு நடந்து கொள் 54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை நமக்குத் தெரியாமல் ஒருவருக்கு வஞ்சனை செய்ய முடியாது . 55. நேரா நோன்பு சீர் ஆகாது மனம் ஒப்பி செய்யாத எந்த விரதமும் சிறப்பாக முடியாது

ஔவையார் பாடல்கள்

            ஔவையார் பாடல்கள்                கொன்றை வேந்தன் 46. தொழுது ஊண் சுவையின் உழுது ஊன் இனிது பிறரிடம் வணங்கி அந்த ஊதியத்தில் உண்பதை விட பயிர் செய்து உண்பதே இனிது . 47. தோழனோடும் ஏழைமை பேசேல் நெருங்கிய நண்பனிடத்தும் நம் வறுமை பற்றிப் பேசக் கூடாது   48. நல்இணக்கம் அல்லது அல்லல் படுத்தும் நல்லோர் நட்பு இல்லையேல் , அல்லல் படுவோம் 49. நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை நாடு செழித்திருக்குமானால் எவருக்கும் இன்பமே . 50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை சொன்ன சொல் தவறாது இருத்தலே , நிலையான கல்வி கற்றதற்கு அழகு

ஔவையார் பாடல்கள்

                                           ஔவையார் பாடல்கள் கொன்றை வேந்தன்   41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு கணவனுக்குத் துன்பம் வந்த போது , கவலைப் படாத பெண்கள் , மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டதற்கு ஒப்பாவர் . 42. தூற்றம் பெண்டிர் கூற்றெனத் தகும் எப்போதும் அவதூறுக் கூறிக் கொண்டே இருக்கும் பெண்கள் குடும்பத்திற்கு எமன் போன்றவர் . 43. தெய்வம் சீறின் கைதவம் மாளும் தெய்வம் கோபித்துக் கொண்டால் , நம் தவமும் அழிந்து போம் . 44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும் பொருளைத் தேடிச் சேர்க்காது , இருப்பதை செலவிட்டுக் கொண்டிருந்தால் துன்பத்தில் முடியும் 45. தையும் மாசியும் வையகத்து உறங்கு தை , மாசி ( வெயில் காலம் ) மாதங்களில் வைக்கோல் வேய்ந்த வீட்டில் உறங்கு