Skip to main content

Posts

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் கொன்றை வேந்தன் 86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு உற்சாகமான முயற்சியோடு இருப்பதே முன்னேற்றத்திற்கு அழகு 87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை தூய்மையான மனமுள்ளோருக்கு , வஞ்சக எண்ணம் இல்லை 88. வேந்தன் சீறின் ஆம்துணை இல்லை அரசின் கோபத்துக்கு ஆளானவருக்கு வேறு துணை இல்லை 89. வைகல் தோறும் தெய்வம் தொழு தினமும் காலையில் தெய்வத்தை வணங்கு 90. ஒத்த இடத்து நித்திரை கொள் பழக்கப்பட்ட , சமமான இடத்தில் படுத்து உறங்கு 91. ஓதாதார்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம் படிக்காதவர்களிடம் மனமறிந்த ஒழுக்கம் இருக்காது .
Recent posts

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் கொன்றை வேந்தன் 81. வளவன் ஆயினும் அளவு அறிந்து உண் சோழ வளவனை ஒத்த செல்வம் படைத்திருந்தாலும் , வரவு அறிந்து செலவு செய்து உண்ண வேண்டும் 82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும் மழை குறைந்து விடுமானால் பல தான தர்மங்கள் குறைந்து விடும் 83. விருந்தில்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம் விருந்தினரை உபசரித்தறியாத இல்லத்தில் தேவையான ஒழுக்கம் இருக்காது 84. வீரன் கேண்மை கூர் அம்பாகும் வீரனுடன் கூடிய நட்பு , கையில் கூர்மையான அம்பை வைத்திருப்பதற்கு ஒப்பாகும் 85. உரவோர் என்கை இரவாது இருத்தல் யாசிக்காமல் இருப்பதே வல்லவர்க்கு இலக்கணம்

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் கொன்றை வேந்தன் 76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு மெத்தையில் படுத்து உறங்குதலே தூக்கத்திற்கு சுகம் 77. மேழிச் செல்வம் கோழைப் படாது கலப்பையால்   உழைத்துச்   சேர்த்த   செல்வம்   ஒரு   போதும்   வீண்   போகாது 78. மைவிழியார் தம் மனைஅகன்று ஒழுகு விலை மாதர் இல்லங்களிலிருந்து ஒதுங்கி இரு 79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம் பெரியோர் சொல்லை கேளாமல் மறுத்தால் அந்த காரியங்கள் கெட்டுவிடும் 80. மோனம் என்பது ஞான வரம்பு மௌனமே மெய்ஞ்ஞானத்தின் எல்லை

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் கொன்றை வேந்தன் 71. மாரி அல்லது காரியம் இல்லை மழையின்றி ஒன்றும் இல்லை 72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை மழை வரப்போவதற்கு அறிகுறியே மின்னல் 73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது மாலுமி   இல்லாத   ஓடம்   செல்லாது 74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் பிறருக்கு செய்யும் நன்மை , தீமைகள் பின்பு நமக்கே வரும் 75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் முதியோர்கள் அறிவுரை அமிர்தம் போன்றது

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் கொன்றை வேந்தன் 66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம் அறியாதவர் போன்று இருப்பது பெண்களுக்கு அணிகலன் 67. பையச் சென்றால் வையந் தாங்கும் நிதானமாகச் செய்யும் கார்யங்களில் வெற்றி நிச்சயம் 68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர் அனைத்துத் தீங்குகளையும் விட்டு விடு 69. போனகம் என்பது தானுழுது உண்ணல் தான் முயன்று உழைத்து சம்பாதித்ததே உணவு என்பதாகும் 70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண் தேவாம்ருதமே கிடைத்தாலும் , பிறரோடு சேர்ந்து உண்

அவ்வையர் ஞானகுறள்

  அவ்வையர் ஞானகுறள் பகுதி 1   வீட்டுனெறிப்பால் 1. மோட்சம் செல்லும் வழி   ஞானகுறள் : 1 ஆதியாய் நின்ற வறிவுமுத லெழுத் தோதிய நூலின் பயன் .           1   ஒருவனிடம் ஆதியாய் நின்று அவனை ஆட்டிப் படைப்பது அவனிடமுள்ள அறிவு. அந்த அறிவுதான் அவனுக்கு முதலெழுத்து (தலையெழுத்து). அந்த அறிவை பயன்படுத்தி இறைவனை நாடும்போது, நூலினால் பெற்ற அறிவு முழுமை பெறுகிறது.   Meaning: The knowledge of a person makes him perfect. That knowledge is his initial and investment. When he seeks the God using that knowledge gained from the scriptures it becomes complete.  

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் கொன்றை வேந்தன் 61. பிறன்மனை புகாமை அறம் எனத்தகும் அடுத்தவன் மனைவியை விரும்பாததே சிறந்த அறம் 62. பீரம் பேணில் பாரம் தாங்கும் தாய்ப்பாலை ஊட்டி வளர்த்தால் , அந்தக் குழந்தை பலம் பெறும் , நிர்வாக சுமைகளைத் தாங்கும் 63. புலையும் , கொலையும் களவும் தவிர் புலாலுண்ணுதல் , கொலை , திருடு இம்மூன்றையும் செய்யாதே 64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம் கொடியவர்களிடம் சிறந்த ஒழுக்கங்கள் இருக்காது 65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும் ஞானம் பெற்றோர்க்கு சுற்றம் என்ற பந்தமும் , கோபமும் கிடையாது