|
ஔவையார் பாடல்கள் கொன்றை வேந்தன் 81. வளவன் ஆயினும் அளவு அறிந்து உண் |
சோழ வளவனை ஒத்த செல்வம் படைத்திருந்தாலும், வரவு அறிந்து செலவு செய்து உண்ண வேண்டும்
|
82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும் |
மழை குறைந்து விடுமானால் பல தான தர்மங்கள் குறைந்து விடும்
|
83. விருந்தில்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம் |
விருந்தினரை உபசரித்தறியாத இல்லத்தில் தேவையான ஒழுக்கம் இருக்காது
|
84. வீரன் கேண்மை கூர் அம்பாகும் |
வீரனுடன் கூடிய நட்பு, கையில் கூர்மையான அம்பை வைத்திருப்பதற்கு ஒப்பாகும்
|
85. உரவோர் என்கை இரவாது இருத்தல் |
யாசிக்காமல் இருப்பதே வல்லவர்க்கு இலக்கணம்

Comments
Post a Comment