|
ஔவையார் பாடல்கள் கொன்றை வேந்தன் 86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு |
உற்சாகமான முயற்சியோடு இருப்பதே முன்னேற்றத்திற்கு அழகு
|
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை |
தூய்மையான மனமுள்ளோருக்கு, வஞ்சக எண்ணம் இல்லை
|
88. வேந்தன் சீறின் ஆம்துணை இல்லை |
அரசின் கோபத்துக்கு ஆளானவருக்கு வேறு துணை இல்லை
|
89. வைகல் தோறும் தெய்வம் தொழு |
தினமும் காலையில் தெய்வத்தை வணங்கு
|
90. ஒத்த இடத்து நித்திரை கொள் |
பழக்கப்பட்ட, சமமான இடத்தில் படுத்து உறங்கு
|
91. ஓதாதார்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம் |
படிக்காதவர்களிடம் மனமறிந்த ஒழுக்கம் இருக்காது.

Comments
Post a Comment