ஔவையார் பாடல்கள்
கொன்றை வேந்தன்
|
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு |
மெத்தையில் படுத்து உறங்குதலே தூக்கத்திற்கு சுகம்
|
77. மேழிச் செல்வம் கோழைப் படாது |
|
கலப்பையால் உழைத்துச் சேர்த்த செல்வம் ஒரு போதும் வீண் போகாது 78. மைவிழியார் தம் மனைஅகன்று ஒழுகு |
விலை மாதர் இல்லங்களிலிருந்து ஒதுங்கி இரு
|
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம் |
பெரியோர் சொல்லை கேளாமல் மறுத்தால் அந்த காரியங்கள் கெட்டுவிடும்
|
80. மோனம் என்பது ஞான வரம்பு |
மௌனமே மெய்ஞ்ஞானத்தின் எல்லை

Comments
Post a Comment