ஔவையார் பாடல்கள்
கொன்றை வேந்தன்
|
51. நீர்அகம் பொருந்திய ஊர்அகத்திரு |
|
நீர் நிறைந்த ஊரில் வசிக்க வேண்டும் 52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி |
சிறிய கார்யமாக இருந்தாலும், யோசித்து செயல் பட வேண்டும்
|
53. நூன் முறை தெரிந்து சீலத் தொழுகு |
நல்ல நூல்களைப் பயின்று, ஒழுக்கத்தோடு நடந்து கொள்
|
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை |
நமக்குத் தெரியாமல் ஒருவருக்கு வஞ்சனை செய்ய முடியாது.
|
55. நேரா நோன்பு சீர் ஆகாது |
மனம் ஒப்பி செய்யாத எந்த விரதமும் சிறப்பாக முடியாது

Comments
Post a Comment