ஔவையார் பாடல்கள்
கொன்றை வேந்தன்
|
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு |
கணவனுக்குத் துன்பம் வந்த போது, கவலைப் படாத பெண்கள், மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டதற்கு ஒப்பாவர்.
|
42. தூற்றம் பெண்டிர் கூற்றெனத் தகும் |
எப்போதும் அவதூறுக் கூறிக் கொண்டே இருக்கும் பெண்கள் குடும்பத்திற்கு எமன் போன்றவர்.
|
43. தெய்வம் சீறின் கைதவம் மாளும் |
தெய்வம் கோபித்துக் கொண்டால், நம் தவமும் அழிந்து போம்.
|
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும் |
பொருளைத் தேடிச் சேர்க்காது, இருப்பதை செலவிட்டுக் கொண்டிருந்தால் துன்பத்தில் முடியும்
|
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு |
தை, மாசி (வெயில் காலம்) மாதங்களில் வைக்கோல் வேய்ந்த வீட்டில் உறங்கு

Comments
Post a Comment