|
ஔவையார் பாடல்கள் கொன்றை வேந்தன் 21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை |
தாழ்வு வந்த போதும் மனந்தளராது இருப்பதே மீண்டும் எல்லாவற்றையும் சேர்க்கும்
|
22. கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி |
கையில் இருக்கும் பொருளை விட உண்மையான செல்வம் கல்வியே ஆகும்
|
23. கொற்றவன் அறிதல் உற்றிடத்து உதவி |
தேவையிருக்கும் இடம் சென்று உதவி செய்தலே, ஆட்சி செய்வோர் அறிய வேண்டியது
|
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு |
கோள் மூட்டி கலகம் செய்வோர் காதில் கோள் சொல்வது காற்றுடன் கூடிய நெருப்பு போன்றது
|
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை |
எவரையும் பழித்துக் கொண்டே இருந்தால், அனைவருக்கும் அவன் பகையாளி ஆவான்

Comments
Post a Comment