|
ஔவையார் பாடல்கள் கொன்றை வேந்தன் 16. கிட்டாதாயின் வெட்டென மற |
நமக்குக் கிடைக்காது என்ற ஒன்றை மறந்து விடு
|
17. கீழோராயினும் தாழ உரை |
உன்னை விடத் தாழ்ந்தோராயினும் நயமாகப் பேசு
|
18. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை |
பிறர் குற்றங்களையே ஆராய்ந்து கொண்டிருந்தால், சுற்றத்தார் என்று எவருமே இருக்க மாட்டார்கள்
|
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல் |
பலவானாக இருந்தாலும், கர்வப் பேச்சு பேசாதே
|
20. கெடுவது செய்யின் விடுவது கருமம் |
நமக்கு ஒருவர் கெடுதல் செய்தால், அதை அப்படியே விட்டு விடுதலே உயர்ந்த செயல்

Comments
Post a Comment